கோணங்கி அள்ளியில் பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

Update:2023-08-21 00:30 IST

நல்லம்பள்ளி தாலுகா கோணங்கி அள்ளி கிராமத்தில் புதுப்பிக்கப்பட்ட விநாயகர் மற்றும் ஊர் மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. விழாவையொட்டி கணபதி, லட்சுமி, சரஸ்வதி பூஜை மற்றும் வாஸ்து பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து விழா கொடியேற்றம் மற்றும் விழா குழுவினருக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் ஏறுபள்ளி சோமேஸ்வரர் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.

முக்கிய சாலைகள் வழியாக நடந்த ஊர்வலம் கோவிலை வந்தடைந்தது. பின்னர் அங்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாகுழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்