பா.ஜ.க.வினர் தடையை மீறி டிராக்டரில் ஊர்வலம் செல்ல முயற்சி

பா.ஜ.க.வினர் தடையை மீறி டிராக்டரில் ஊர்வலம் செல்ல முயற்சி செய்தனர்.

Update: 2022-08-11 17:25 GMT

75-வது சுதந்திர தின விழாவை பா.ஜ.க.வினர் கடந்த ஒரு வார காலமாக தேசிய கொடியை ஏந்தி ஊர்வலமாக சென்று கொண்டாடி வருகிறார்கள். அதன்படி நாகை அருகே உள்ள சிக்கலில் இருந்து நாகூர் வரை பா.ஜ.க.வினர் டிராக்டர்களில் தேசிய கொடி ஏந்தியவாறு ஊர்வலமாக செல்ல திட்டமிட்டு இருந்தனர். இதற்காக 40-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் பா.ஜ.க.வினர், சிக்கலில் ஒன்று கூடி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது அங்கு வந்த போலீசார் தேசிய கொடியுடன் டிராக்டரில் ஊர்வலம் செல்ல தடை விதிப்பதாக கூறினர். இதனால் போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் தடையை மீறி ஊர்வலம் சென்றால் கைது செய்வோம் என நாகை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கென்னடி எச்சரிக்கை விடுத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேரம் வாக்குவாதத்திற்கு பின்னர் 100 மீட்டர் தூரம் மட்டுமே ஊர்வலமாக செல்ல போலீசார் அனுமதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பா.ஜ.க.வினர் டிராக்டர்களில் தேசிய கொடி ஏந்தியவாறு சிக்கலில் இருந்து பொரவச்சேரி வரை ஊர்வலமாக சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்