புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்

புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.;

Update:2023-01-22 00:45 IST

வேதாரண்யம் அருகே கோடியக்காடு ஊராட்சியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார். இதில் துணைத்தலைவர் சரவணன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் அசோக்குமார், ஆசிரியர் பயிற்றுனர் அருள்மணி, பள்ளி தலைமை ஆசிரியர் நீலமேகம் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் எழுத்தறிவு இயக்கம் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்