காவிரி ஆற்றில் பெண் உடல் மீட்பு; போலீசார் விசாரணை

காவிரி ஆற்றில் பெண் உடல் மீட்பு; போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-12-31 19:33 GMT

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே சேமங்கி பகுதியை சேர்ந்த சிலர் காவிரி ஆற்றிற்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது காவிரி ஆற்றங்கரையோரத்தில் தண்ணீரில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் உடல் கிடந்தது. இதுகுறித்து அவர்கள் வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்