ரூ.35 லட்சம் மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு

சின்னதாராபுரம் அருகே ரூ.35 லட்சம் மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டது.;

Update:2022-11-06 00:44 IST

அரவக்குறிச்சி தாலுகா, சின்னதாராபுரம் அருகே உள்ள தொக்குப்பட்டி கிராமத்தில் 87 சென்ட் அரசு நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. இது குறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி தாசில்தார் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் மகுடீஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர் செல்வராணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அதன்பின்னர் நில அளவையர்கள் வரவழைக்கப்பட்டு தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.35 லட்சம் மதிப்புடைய 87 சென்ட் அரசு நிலத்தை அளவை செய்து எல்லை கற்கள் நடப்பட்டு அங்கு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்