கோவிலுக்கு சொந்தமான ரூ.10 லட்சம் மதிப்பிலான இடம் மீட்பு

கோவிலுக்கு சொந்தமான ரூ.10 லட்சம் மதிப்பிலான இடம் மீட்பு

Update: 2023-06-23 19:39 GMT

திருவையாறை அடுத்த கண்டியூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரம்மசிரக்கண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த சில மாதங்களாக குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. கோவில் மதில் சுவரை சுற்றியுள்ள இடங்களை ஆக்கிரமித்து வீடு, கடைகள் கட்டப்பட்டுள்ளதாக கோர்ட்டில் கோவில் நிர்வாக செயல் அலுவலர் வழக்கு தொடுத்து இருந்தார். இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் பேரில் தஞ்சை உதவி ஆணையர் நாகையா, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கீதாபாய், கோவில் செயல் அலுவலர் பிருந்தாதேவி, செயல் அலுவலர்கள் சிவராஜன், ரமேஷ், சக்திவேல் உள்ளிட்ட பலர் முன்னிலையில் கோவில் மதில் சுவரை சுற்றியுள்ள பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு, கடைகள் அகற்றப்பட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த இடத்தின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்