ஆடவல்லீஸ்வரர் கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

பிரம்மதேசம் அருகே ஆடவல்லீஸ்வரர் கோவிலில் நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

Update: 2022-12-23 19:19 GMT

பிரம்மதேசம், 

பிரம்மதேசம் அருகே உள்ள முன்னூரில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆடவல்லீஸ்வரர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு சொந்தமாக, அக்கிராமத்தின் நடுவில் 6 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ஆக்கிரமித்து பால் பூத் நடத்தி வந்தார். இது குறித்து கிராம மக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்ததையடுத்து, அறநிலையத்துறை தனி தாசில்தார் ஞானம் தலைமையில், வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றினர். மேலும் யாரும் அங்கு ஆக்கிரமிப்பு செய்யாத வகையில் கம்பி வேலி அமைத்து, இந்த இடம் அறநிலைக்கு சொந்தமான இடம் என பதாகை வைத்தனர்.

முன்னதாக ஆக்கிரமிப்பு அகற்றும்போது சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்