ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சத்திரப்பட்டி அருகே, ராமபட்டினம்புதூர்-சிந்தலவாடம்பட்டி சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.;

Update:2023-03-15 22:56 IST

சத்திரப்பட்டி அருகே ராமபட்டினம்புதூர்-சிந்தலவாடம்பட்டி சாலையை விரிவாக்கம் செய்து, சாலையின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் விரைவில் கட்டப்பட உள்ளது. இதையடுத்து அந்த சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. பழனி நெடுஞ்சாலைத்துறை உதவிசெயற்பொறியாளர் ஜெயபாலன் தலைமையிலான பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சிந்தலவாடம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகரன், செயலர் செல்லமுத்து ஆகியோர் உடன் இருந்தனர். பாதுகாப்பு பணியில் சத்திரப்பட்டி போலீசார் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்