பழங்காவிரி வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மயிலாடுதுறை பழங்காவிரி வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் உதவி கலெக்டர் ஆய்வு செய்தார்;

Update:2022-07-13 00:19 IST

மயிலாடுதுறை:

சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி மயிலாடுதுறை நகரில் பழங்காவிரி வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மயிலாடுதுறை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கண்ணப்பன் தலைமையில் நடைபெற்றது.. கூறைநாடு பகுதியில் நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மயிலாடுதுறை உதவி கலெக்டர் யுரேகா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது. மயிலாடுதுறை நகரில் பழங்காவிரி வாய்க்காலில் 50 இடங்களில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்