பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணி

பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணி தொடங்கப்பட்டது.

Update: 2023-06-28 18:32 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலை தமிழக அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிளாஸ்டிக் இல்லா பகுதியாக அறிவித்தது. இதனைத்தொடர்ந்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கி பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணியை தொடங்கி வைத்தார். இதில் அன்னை தெரசா கல்வி நிறுவனம், மான்போர்டு பள்ளி மாணவர்கள், ராம்கோ சிமெண்டு பணியாளர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியை மேற்கொண்டனர். இதில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில்குமார், அறநிலையத்துறை அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்