சாலையோர புதர்கள் அகற்றம்

காட்டு யானைகள் நடமாட்டம் எதிரொலியாக சாலையோர புதர்கள் அகற்றப்பட்டது.

Update: 2023-10-19 21:30 GMT

பந்தலூர் அருகே ஏலமன்னா சுற்றுப்புற பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இந்தநிலையில் படச்சேரி கிராமத்திற்குள் நேற்று முன்தினம் 2 காட்டு யானைகள் புகுந்தன. அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி மணிமாறன் (வயது 51) என்பவரை யானை தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் எலியாஸ் கடை பகுதியில் போராட்டம் நடத்த திரண்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கும்கி யானைகள் உதவியுடன் காட்டு யானைகளை விரட்ட வேண்டும். டேன்டீ தோட்டங்களில் புதர் போல் வளர்ந்துள்ள தேயிலை செடிகளை அகற்ற வேண்டும் என்றனர். அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்படி, டேன்டீ தோட்டத்தில் வளர்ந்த தேயிலை செடிகள் வெட்டப்பட்டது. ஏலமன்னா பகுதியில் சாலையோரத்தில் இருந்த புதர்களை வனச்சரகர் அய்யனார் மற்றும் வனத்துறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்