சமத்துவபுரத்தில் ரூ.75 லட்சத்தில் வீடுகள், சாலைகள் சீரமைக்கும் பணி

உடையாமுத்தூர் சமத்துவபுரத்தில் ரூ.75 லட்சத்தில் வீடுகள், சாலைகள் சீரமைக்கும் பணி தொடங்கியது.

Update: 2022-05-19 15:10 GMT

திருப்பத்தூர்

கந்திலி ஊராட்சி ஒன்றியம் உடையமுத்தூர் கிராமத்தில் தி.மு.க. ஆட்சியின்போது அமைக்கப்பட்ட சமத்துவபுரத்தில் 100 வீடுகள், சாலைகள், பூங்கா ஆகியவற்றை சீரமைக்கவும், வீடுகளுக்கு வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளுக்கு தமிழக அரசு ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான பணிகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சமத்துவபுரம் பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமாவதி தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் சரவணன் வரவேற்றார்.

உதவித் திட்ட அலுவலர் ஆப்தாப்பேகம், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.எஸ்.அன்பழகன், கந்திலி ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி திருமுருகன் ஆகியோர் பூமிபூஜை போட்டு பணிகளை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் கே.ஏ.குணசேகரன், கூட்டுறவு சங்க தலைவர் குலோத்துங்கன், ஆர்.தசரதன், ஒன்றிய கவுன்சிலர்கள் லட்சுமி சந்திரசேகர், ஹேமலதா வினோத், சீனிவாசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மேற்பார்வை பொறியாளர் ரவி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்