பழைய பஸ்கள் புதிய தொழில் நுட்பத்துடன் புனரமைப்பு

பழைய பஸ்கள் புதிய தொழில் நுட்பத்துடன் புனரமைப்பு பணிகளை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார்.

Update: 2023-06-21 19:11 GMT

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள 1,000 பழைய பஸ்களை புதிய தொழில்நுட்பத்துடன் புனரமைத்து புதிதாக கூண்டு கட்ட சாலை போக்குவரத்து நிறுவனத்தின் மூலம் ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் தனியார் கூண்டு கட்டும் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக போக்குவரத்து கழகங்களின் 125 பழைய பஸ்கள் முறையே ஜெமினி கோச் கரூர்-43, ஆரோ கோச் மதுராந்தகம்-25, குளோபல் டி.வி.எஸ். விராலிமலை-32, கே.எம்.எஸ். கோச் பெங்களூரு-25 ஆகிய நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. விராலிமலையில் குளோபல் டி.வி.எஸ். நிறுவனத்திடம் முதல்கட்டமாக 32 பஸ்கள் ஒப்படைக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவற்றின் கட்டுமானம், தோற்றப்பொலிவை பார்வையிட்டார். டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் பயணிகளின் வசதிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் பஸ்களின் கட்டுமான பணிகளில் சில மாற்றங்களை மேற்கொள்ள அறிவுறுத்தினார். மேலும் பணியை விரைந்து முடிந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வெளிக்கொண்டு வர அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சீனிவாசன், துணை தலைவர் லிங்கம், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல பொதுமேலாளர் சக்திவேல், புதுக்கோட்டை மண்டல பொதுமேலாளர் குணசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்