குடியரசு தினவிழா

கோவிந்தபேரி ஊராட்சியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-01-27 18:45 GMT

கடையம், ஜன:

கோவிந்தபேரி ஊராட்சியில் குடியரசு தின விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன் தலைமை தாங்கி தேசிய கொடியேற்றினார். துணைத்தலைவர் இசேந்திரன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் மூக்காண்டி வரவேற்றார். தலைமை ஆசிரியர் ஸ்டீபன் ராஜ் வாழ்த்தி பேசினார். வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ராஜாங்கபுரத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. யூனியன் பற்றாளர் பாலகிருஷ்ணன், வேளாண் அலுவலர் பானுமதி, கிராம உதவியாளர் சக்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்