தேவாலாவில் மழைநீர் வடிகால் வாய்க்காலை தூர்வார கோரிக்கை

தேவாலாவில் மழைநீர் வடிகால் வாய்க்காலை தூர்வார கோரிக்கை

Update: 2023-07-05 19:00 GMT


கூடலூர்


கூடலூர் தாலுகா பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் வரத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் தேவாலாவில் இருந்து கரிய சோலை செல்லும் சாலையில் சிறிய பாலம் உள்ளது. மழைக்காலத்தில் இப்பகுதியில் சேரக்கூடிய தண்ணீர் பாலம் வழியாக வெளியேறுகிறது.


தற்போது பாலத்தின் உள்பக்கம் மண் நிறைந்து மழை நீர் சீராக வழிந்து ஓட முடியாத நிலை உள்ளது. இது குறித்து நெல்லியாளம் நகராட்சிக்கு அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் பகல் 12 மணிக்கு அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் பாலத்தில் உள்ள அடைப்புகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மண் குவியல்களை அகற்றினர். ஆனால் அதே பகுதியில் விட்டுச் சென்றதால் நேற்று பெய்த மழையில் மீண்டும் பாலத்தில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சீராக செல்ல வழி இல்லாமல் போனது. இதனால் மழை நீர் வடிகால் வாய்க்கால் மற்றும் பாலத்தை முறையாக தூர் வார வேண்டுமென பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்