தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்த கோரிக்கை

கம்பத்தில் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்த வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2023-04-23 18:45 GMT

தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை மூலம் அமைப்புசாரா தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குப்படுத்தவும், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்தோடு தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியம் உள்பட 17 நல வாரியங்கள் செயல்படுகின்றன. இதில் 53 வகையான கட்டுமான தொழில், 60 வகையான அமைப்புசாரா தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த அமைப்புகளில் இணைந்து அடையாள அட்டை பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்கள் மூலம் விபத்து மரணம், கல்வி உதவித் தொகை, திருமண உதவி, மகப்பேறு உதவி, ஓய்வூதியம் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அந்தந்த மாவட்ட தொழிலாளர் அலுவலகம் மூலம் நலத்திட்ட உதவிகள் வங்கிக் கணக்கு மின்னணு பரிமாற்றம் மூலம் வழங்கப்படுகிறது. இந்த திட்டங்கள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் ஏழை தொழிலாளர்கள் உறுப்பினராக சேர முடியாமல் உள்ளனர். எனவே கம்பம் பகுதியில் தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கு சிறப்பு முகாம் நடத்த மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்