அரசு கல்லூரிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை

அரசு கல்லூரிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;

Update:2023-10-07 22:46 IST

இந்திய மாணவர் சங்கத்தின் குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கிளை மாநாடு மாவட்ட குழு உறுப்பினர் பச்சையப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் பயின்ற மாணவ-மாணவிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடத்தப்படாமலே உள்ளது. எனவே பட்டமளிப்பு விழா நடத்தாமல் தாமதப்படுத்தும் கவர்னரை கண்டிப்பதுடன், பட்டமளிப்பு விழாவை உடனே நடத்த வேண்டும். பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு மாணவ-மாணவிகள் சென்று வர கூடுதல் அரசு பஸ்கள் இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்