பொள்ளாச்சி அருகே உரக்கிடங்கில் தவறி விழுந்த பசுமாடு மீட்பு
பொள்ளாச்சி அருகே உரக்கிடங்கில் தவறி விழுந்த பசுமாடு மீட்பு;
ஆனைமலை
பொள்ளாச்சி அருகே உள்ள பில்சின்னம்பாளையம், மதுரை வீரன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் சின்னப்பன். இவருக்கு சொந்தமானபசுமாடு வால்பாறை ரோட்டில் உள்ள தனியார் தென்னந்தோப்பு பகுதிக்கு சென்றபோது அங்கு உள்ள 6 அடி ஆழம் உள்ள உரக்கிடங்கில் விழுந்தது. குழியில் விழுந்த பசுமாடு வெளியே வர முடியாமல் சத்தம் போட்டது. இதுபற்றி அக்கம் பக்கத்தினர் பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று குழிக்குள் இறங்கி பசு மாட்டின் மீது லாவகமாக கயிறை கட்டி மீட்டனர்