கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு

கேசவன் குப்பம் கிராமத்தில் கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்கப்பட்டது.;

Update:2023-04-25 23:49 IST

சோளிங்கரை அடுத்த கேசவனகுப்பம் கிராமத்தில் 30 அடி ஆழ விவசாயக் கிணற்றில் புள்ளிமான் விழுந்து கிடந்தது. இது குறித்து வனச்சரகர் துரைமுருகன் சோளிங்கர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தார்்.

அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சிவகுமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்மந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 30 அடி ஆழமுள்ள கிணற்றில் இருந்து அரை மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு 2 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமானை மானை உயிருடன் மீட்டனர். பின்னர் ஒப்படைக்கப்பட்ட அந்த புள்ளிமானை வனத்துறையினர் அருகே உள்ள காப்புக் காட்டில் விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்