வேளாண் வளர்ச்சி திட்ட பணிகளை இணை இயக்குனர் ஆய்வு

வேளாண் வளர்ச்சி திட்ட பணிகளை இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.

Update: 2022-08-12 17:21 GMT

சிவகங்கை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் சிறப்பு மண்டல அலுவலராக வேளாண்மை விதை ஆய்வு மைய இணை இயக்குனர் மல்லிகா நியமிக்கப்பட்டுள்ளார். இதையொட்டி சிவகங்கை வந்த அவர் அனைத்து வட்டாரங்களிலும் ஆய்வு செய்து திட்டத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது;- வட்டார அளவில் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைப்பதே கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் ஆகும். இதன்மூலம் கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல், நீர்வள ஆதாரங்களை பெருக்குதல், சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைத்தல், வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துதல், நுண்ணீர் பாசன முறையினை பின்பற்றுதல், கால்நடைகளின் நலன் காத்து, பால் உற்பத்தியை பெருக்குதல், வருவாய்த் துறையின் மூலம் புதிய பட்டா, பட்டா மாறுதல் செய்து வழங்குதல், கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிக அளவு பயிர் கடன்கள் வழங்குதல், நீர் வழித்தடங்களைத் தூர்வாருதல் போன்ற திட்டபணிகள் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குனர் தனபாலன், வேளாண்மை துணை இயக்குனர்கள் பன்னீர்செல்வம், சுருளிமலை, பழ.கதிரேசன், பரமேஸ்வரன் மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்