காப்பகங்கள், சிறைகளில் ஆய்வு

தமிழகம் முழுவதும் காப்பகங்கள், சிறைகளில் ஆய்வு மனித உரிமை ஆணைய உறுப்பினர் தகவல் தெரிவித்தார்;

Update:2023-03-13 00:15 IST

தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தைகள் காப்பகங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் கிளைச் சிறைகளில் அரசின் சார்பில் ஆய்வுகள் மேற்கொண்ட தமிழ்நாடு அரசின் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் மயிலாடுதுறைக்கு நேற்று வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள குழந்தைகள் காப்பகங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் கிளைச் சிறைகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டது. விழுப்புரம் ஆசிரமத்தில் நிறையபேர் ஆள்கடத்தல் செய்யப்பட்டதாக மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி, பொறையாறு பகுதிகளில் உள்ள காப்பகங்களில் ஆய்வு நடத்தினோம். இதேபோல் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் என்றார்.

முன்னதாக, மயிலாடுதுறை வந்த அவரை முன்னாள் எம்.எல்.ஏ. ஜெகவீரபாண்டியன், சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம், மாவட்ட திரைப்பட இயக்குனர்கள் சங்க செயலாளர் பாபு, நிர்வாகிகள் கவிக்குமார், நாராயணசாமி, சிவக்குமார், எலந்தங்குடி இக்பால் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்