கச்சிகுடா-மதுரை, கன்னியாகுமரி-ஐதராபாத் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவை நீட்டிப்பு

கச்சிகுடா-மதுரை, கன்னியாகுமரி-ஐதராபாத் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.;

Update:2026-01-28 09:33 IST

சென்னை,

கச்சிகுடா - மதுரை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:07191) சேவை வருகிற பிப்ரவரி 2, 9, 16, 23 ஆகிய தேதிகளிலும் இயங்கும் எனவும், வண்டி எண் 07192 மதுரை- கச்சிகுடா சிறப்பு எக்ஸ்பிரஸ் சேவை வருகிற பிப்ரவரி 4, 11,18, மற்றும் 25 ஆகிய தேதிகளிலும் இயங்கும் வகையில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதே போல் வண்டி எண்: 07230 ஐதராபாத்- கன்னியாகுமரி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் பிப்ரவரி 4, 11, 18 மற்றும் 25 ஆகிய தேதிகளுக்கும், வண்டி எண்: 07229 கன்னியாகுமரி- ஐதராபாத் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை பிப்ரவரி 6, 13, 20, மற்றும் 27 ஆகிய தேதிகளிலும் நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தென்மத்திய ரெயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்