ஏடிஜிபி ஜெயராம் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து
ஏடிஜிபி ஜெயராம் மீதான சஸ்பென்ட் உத்தரவை தமிழக உள்துறை ரத்து செய்துள்ளது.;
சென்னை,
திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கத்தில் காதல் திருமணம் செய்த இளைஞரின் சகோதரன் கூலிப்படை மூலம் கடத்தப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராமன் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக கோர்ட்டு உத்தரவின்பேரில் ஏடிஜிபி ஜெயராமன் கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து ஏடிஜிபி ஜெயராமனை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதன்படி ஆள் கடத்தலுக்கு கார் கொடுத்து உதவிய குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏடிஜிபி ஜெயராமன் சஸ்பென்ட் செய்யப்பட்டார். இதனையடுத்து துறை ரீதியிலான விசாரணை நடந்தது வந்தது. இந்த நிலையில் தற்போது அவரது சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து தமிழ்நாடு உள்துறை உத்தரவிட்டுள்ளது.
பணியிடம் ஒதுக்கப்படாமல் உள்ள நிலையில் ஜெயராமுக்கு இந்த வாரம் பணியிடம் ஒதுக்கி உத்தரவு பிறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வருகிற மே மாதத்துடன் ஜெயராம் ஓய்வுபெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.