புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி விலை... இன்றைய நிலவரம் என்ன...?

கடந்த ஒரு வாரமாக தங்கம்,வெள்ளி போட்டிப்போட்டு விலை உயர்ந்து வருகிறது.;

Update:2026-01-28 09:46 IST

சென்னை,

தங்கம் விலை கடந்த 16-ந்தேதியில் இருந்து தாறுமாறாக எகிறி வருகிறது. தினமும் விலை அதிகரித்து புதிய உச்சத்தை பதிவு செய்து வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் கடந்த 21-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதிலும் கடந்த ஒரு வாரமாக இரண்டும் போட்டிப்போட்டு உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் சமீபநாட்களாக காலை மற்றும் பிற்பகல் என 2 நேரங்களில் விலை மாற்றம் இருந்து வருகிறது.

தங்கம் விலை

இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,960 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,22,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.370 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.15,330-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் அசாதாரணமான சூழலால், தொடர்ந்து தங்கம் விலையில் ஏற்றம், இறக்கம் இருக்கும் என்றே சொல்லப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை தொடர்ச்சியாக இன்றும் உச்சம் அடைந்துள்ளது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், கிலோவுக்கு ரூ.13,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.4,00,000-க்கும், கிராமுக்கு ரூ.13 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.400-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

28.01.2026 - ஒரு சவரன் - ரூ.1,22,640

27.01.2026 - ஒரு சவரன் - ரூ.1,19,680

26.01.2026 - ஒரு சவரன் - ரூ.1,20,200

25.01.2026 - ஒரு சவரன் - ரூ.1,18,000

24.01.2026 - ஒரு சவரன் - ரூ.1,18,000

Tags:    

மேலும் செய்திகள்