பணித்தள பொறுப்பாளரை மாற்ற எதிர்ப்பு

இச்சிபுத்தூர் ஊராட்சியில் பணித்தள பொறுப்பாளரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் முறையிட்டனர்.;

Update:2023-09-08 00:47 IST

அரக்கோணம் அருகே உள்ள இச்சிபுத்தூர் ஊராட்சியில் உள்ள இச்சிபுத்தூர், அருந்ததியர் நகர், எம்.ஆர்.எப். நகர், முனியப்ப நாயுடு கண்டிகை, ரெட்டை குளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் 100 நாள் வேலை செய்து வருவதாகவும், அவர்களுக்கு ஒரு நாளைக்கு 300-க்கும் மேற்பட்டவர்கள் சுழற்சி முறையில் வேலை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் பணித்தள பொறுப்பாளர் லட்சுமி பாலாவை மாற்றச் சொல்லி வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் சிலர் புகார் தெரிவிப்பதாகவும், அவரை மாற்றாமல் தொடர்ந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி 100 நாள்வேலை திட்ட பெண்கள் ஊராட்சி மன்ற தலைவர் பத்மநாபனிடம் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து தலைவர் பத்மநாபன் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்