ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் போக்சோவில் கைது

ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் போக்சோவில் கைது;

Update:2023-03-19 00:15 IST

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 9 மற்றும் 13 வயது சிறுமிகள், அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். சகோதரிகளான அவர்கள் 2 பேரும், பள்ளிக்கு செல்லும்போது, ஒருவர் பாலியல் ரீதியாக சைகை காட்டி தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து தங்களது பெற்றோரிடம், அந்த சிறுமிகள் கூறினர். அவர்கள், பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் விஜயகுமார்(வயது 58) என்பவர் சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்