ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்

கடலூரில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.

Update: 2023-09-23 20:30 GMT

கடலூர்:

கடலூர் மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் கடலூரில் மாவட்ட தலைவர் கலியபெருமாள் தலைமையில் நடைபெற்றது. கவுரவ தலைவர் ராஜாராம் முன்னிலை வகித்தார். துணை தலைவர் ரவிச்சந்திரன் தீர்மானங்களை வாசித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட கருவூல அலுவலர் சுஜாதா, கூடுதல் கருவூல அலுவலர் சரவணன், பாரத வங்கி முதன்மை மேலாளர்கள் ஸ்ரீராம்குமார், கணேஷ், ராஜா, துணை கிளை மேலாளர் சுமிதா ஆகியோர் கலந்து கொண்டு 75 வயது முடிவடைந்தவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினர்.

இதையடுத்து தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க மாநில தலைவர் மாணிக்கம், பொதுச்செயலாளர் முத்துக்குமரவேலு, பொருளாளர் பிரகாஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் 6 மாதங்களுக்கு ஒரு முறை ஒன்றிய அரசால் வழங்கப்படும் அகவிலைப்படியில் ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படி நிலுவையை ரொக்கமாக வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கனரா வங்கி உதவி பொது மேலாளர் பாலசுப்பிரமணியன், ஓய்வு பெற்ற அலுவலர்கள் நலச்சங்க தலைவர் முகமது இப்ராஹிம், செயலாளர் பன்னீர்செல்வம், திட்டக்குடி வட்ட தலைவர் அண்ணாதுரை, காட்டுமன்னார்கோவில் வட்ட தலைவர் வெங்கடாஜலபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி செயலாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்