கோவையில் அரிசி கடைகள் அடைப்பு

அரிசிக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.யை திரும்பப் பெற வலியுறுத்தி கோவையில் அரிசி கடைகள் அடைக்கப்பட்டன.;

Update:2022-07-16 19:57 IST

அரிசிக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.யை திரும்பப் பெற வலியுறுத்தி கோவையில் அரிசி கடைகள் அடைக்கப்பட்டன.

அரிசிக்கு ஜி.எஸ்.டி. வரி

அரிசிக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது. இதை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள் ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரிசி ஆலைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளன.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 400-க்கும் மேற்பட்ட அரிசி மொத்த, சில்லரை விற்பனை கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளன. இதனால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

கடைகள் அடைப்பு

கோவை டவுன்ஹால் பகுதியில் அரிசி கடை லைன் என அழைக்கப்படும் வைசியாள் வீதி, ரங்கேகவுடர் வீதி, பெரிய கடை வீதி உள்ளிட்ட வீதிகளில் பெரும்பாலான அரிசி கடைகள் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் எப்போது பரபரப்பாக காணப்படும் அந்த பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

இது குறித்து கோயமுத்தூர் அரிசி கடை வியாபாரிகள் சங்க செயலாளர் சரவணக்குமார் கூறுகையில், ஜி.எஸ்.டி. விதிப்பால் அரிசி விலை கிலோவுக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அடித்தட்டு மக்கள் முதல் அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மேலும் வேளாண் மை சார்ந்த உணவு உற்பத்தியாளர்களும் பாதிக்கப்படுவார்கள் என்றார். 

மேலும் செய்திகள்