மின் விளக்குகள் எரியாததால் விபத்து அபாயம்

பொள்ளாச்சி-கோவை சாலை ஆச்சிப்பட்டியில் மின் விளக்குகள் எரியாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.;

Update:2023-05-16 02:00 IST

பொள்ளாச்சி

பொள்ளாச்சி-கோவை சாலை ஆச்சிப்பட்டியில் மின் விளக்குகள் எரியாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.

மின் விளக்குகள்

பொள்ளாச்சி-கோவை சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் ஆச்சிப்பட்டியில் இருந்து கோவை ஈச்சனாரி வரை 26 கி.மீ. தூரத்துக்கு ரூ.570 கோடி செலவில் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது.

மேலும் விபத்துகளை தடுக்கும் வகையில் ஆச்சிப்பட்டி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சாலையில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. ஆச்சிப்பட்டியில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு 20 விளக்குகள் அமைக்கப்பட்டன. ஆனால், இந்த விளக்குகள் கடந்த சில நாட்களாக எரிவதில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

விபத்து அபாயம்

பொள்ளாச்சி-கோவை ரோடு ஆச்சிப்பட்டியில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலையும் போடப்பட்டு உள்ளது. இதற்கிடையே ஆச்சிப்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக எந்த விளக்குகளும் எரிவதில்லை. இதனால் அந்த பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

பொதுமக்கள் சாலையை கடந்து சென்றால், தூரத்தில் இருந்து வாகனங்களில் வரும் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதன் காரணமாக விபதுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முக்கிய சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, ஏதாவது விபத்துகள் ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்படும் முன்பு மின் விளக்குகள் மீண்டும் எரிவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்