தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்

சங்கரன்கோவிலில் தூய்மை பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update:2023-08-31 00:30 IST

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தனியார் ஒப்பந்த நிறுவனம் கடந்த சில மாதங்களாக சரியான முறையில் ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ஊதியத்தை உடனடியாக வழங்க கோரி சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுதீர் பேச்சு வார்த்தை நடத்தினார். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்