ஈரோட்டில் 6 மாதங்களாக நடக்கும் சாலை விரிவாக்க பணிமாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

ஈரோட்டில் 6 மாதங்களாக நடக்கும் சாலை விரிவாக்க பணியை மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் ஆய்வு செய்தாா்.

Update: 2023-07-28 22:02 GMT

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. சாலைகள் அளவீடு செய்யப்பட்டு, சாலையோரமாக மழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறது. இதற்காக சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டு கான்கிரீட் அமைக்கப்படுகிறது. இதையொட்டி மரங்கள் வேரோடு அகற்றப்பட்டதுடன், ஆக்கிரமிப்புகளும் இடித்து அகற்றப்பட்டன.

இந்த பணிகள் கடந்த 6 மாதங்களாக நடந்து வருவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகளும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்தனர். ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு ஈ.வி.என்.ரோடு பகுதியில் நடந்து வரும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் பார்வையிட்டார்.

அப்போது பாதாள சாக்கடை குழாய், ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் குழாய் போன்றவற்றில் சேதம் ஏற்படாத வகையில் வடிகால் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும், போக்குவரத்துக்கு இடையூறாக ஒரே இடத்தில் மண்ணை கொட்டி வைக்கக்கூடாது, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், மின்வாரிய புதைவட கேபிளை பாதுகாப்பாக மாற்றி அமைக்க வேண்டும் என பல்வேறு ஆலோசனையை அவர் அதிகாரிகளுக்கு வழங்கினார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார், மாநகர நல அதிகாரி பிரகாஷ் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்