சேவல் சூதாட்டம்; 2 பேர் கைது

சேவல் சூதாட்டம்; 2 பேர் கைது;

Update:2023-01-23 00:15 IST

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள புளியம்பட்டி பகுதியில் சேவல் சூதாட்டம் நடைபெறுவதாக மகாலிங்கபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சேவல்களை வைத்து சூதாடி கொண்டிருந்த டி.கோட்டாம்பட்டி பகுதியைசேர்ந்த கிருஷ்ணராஜ் (வயது 24), சின்னாம்பாளையம் காமாட்சி நகரை சேர்ந்த ராகவன் (20), அதே பகுதியைச் சேர்ந்த கிரி பிரசாத் (21) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் சூதாட்டத்துக்கு பயன்படுத்திய 2 சேவல்களையும் பறிமுதல் செய்தனர். அவை உயிரிழந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்