முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ.35 லட்சம் மோசடி

மகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்த மர வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-24 19:35 GMT

சேலம்:-

மகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்த மர வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

முன்னாள் ராணுவ வீரர்

சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியை சேர்ந்தவர் ராஜூ. முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோல்காரனூர் பகுதியை சேர்ந்த மர வியாபாரி கமலக்கண்ணன் என்பவர் அறிமுகமானார். அப்போது அவரிடம் உங்களது மகனுக்கு வருமான வரித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறினார்.

இதற்காக ராஜூவிடம் இருந்து கமலக்கண்ணன் ரூ.25 லட்சம் வாங்கினார். பின்னர் அவர் ராஜூவிடம் வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு வந்து இருப்பதாகவும், தேர்வு எழுதினால் போதும் தேர்ச்சி ஆகி விடலாம் என்றும் கூறி மேலும் ரூ.10 லட்சத்தை பெற்று கொண்டார். இதையடுத்து அவருக்கு போலியான ஆணை ஒன்று வழங்கினார்.

கைது

இதுகுறித்து ராஜூ சேலம் வருமான வரி அலுவலகத்தில் விசாரித்த போது இது போலி ஆணை என்பது தெரியவந்தது. இந்த மோசடி குறித்து அவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் விசாரணை நடத்தினார்.

இதில் மகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ராஜூவிடம் கமலக்கண்ணன் ரூ.35 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று எம்.காளிப்பட்டி பகுதியில் கமலக்கண்ணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்