ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் ரூ.5¼ லட்சம் நகைகள் கொள்ளை

ரிஷிவந்தியத்தில் ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் புகுந்து ரூ.5¼ லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துசென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

Update: 2023-01-27 18:45 GMT

ரிஷிவந்தியம்

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்

ரிஷிவந்தியத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மகன் பர்னபாஸ்(வயது 66). ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியரான இவா் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னையில் உறவினா் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து பர்னபாஸ் மறுநாள் இரவு குடும்பத்தினருடன் ஊருக்கு திரும்பி வந்தார்.

நகைகள் கொள்ளை

அப்போது வீட்டின் மாடியில் வசித்து வரும் அவரது மகன் விஜய்இருதயராஜ் வீட்டின் அறை கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நெக்லஸ், வளையல், தோடு உள்ளிட்ட 13 பவுன் நகைகளை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் என கூறப்படுகிறது.

பின்னர் இது குறித்து பர்னபாஸ் கொடுத்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவுசெய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வீ்ட்டில் புகுந்து மர்ம நபர்கள் 13 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் ரிஷிவந்தியம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்