ரூ.70 கோடியில் அடையாறு ஆற்றை அகலப்படுத்தும் பணி - அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்

அடையாறு ஆற்றை ரூ.70 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்தும் பணியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.;

Update:2022-05-27 18:50 IST

தமிழக அரசின் நீர்வளத்துறை, வெள்ளத்தடுப்பு பணி சார்பில் செம்பரம்பாக்கம் மழைநீர் கால்வாய் கலக்கும் இடத்தில் இருந்து அனகாபுத்தூர் பாலம் வரை அடையாறு ஆற்றை ரூ.70 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்தும் பணி நேற்று தொடங்கப்பட்டது. இதை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். அவருடன் குன்றத்தூர் நகரமன்ற தலைவர் சத்தியமூர்த்தி, பொதுப்பணி துறை அதிகாரிகள் பொதுப்பணி திலகம், பாபு உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்