தமிழக கிராமப்புற கலைஞர்களை புறக்கணிக்கும் மத்திய அரசின் கலாச்சார துறையின் செயல்பாடுகளைக் கண்டித்து பாரத வெண்புறா கலை இலக்கிய பேரவை சார்பில் தர்மபுரி தொலைபேசி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நிறுவனத் தலைவர் கதிர்வேலு தலைமை தாங்கினார். தர்மபுரி மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் மாது, நாமக்கல் மாவட்ட தலைவர் தங்கவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். விண்ணப்பித்த அனைத்து கிராமப்புற கலைஞர்களுக்கும் ஓய்வூதிய மருத்துவ உதவித் தொகையை உடனே வழங்க வேண்டும். தமிழக கிராமப்புற கலைஞர்களை மத்திய அரசின் கலாச்சாரத் துறை புறக்கணிக்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் பாண்டியன், சித்துராஜ், கூன்மாரி, காளியப்பன், சண்முகம் உள்ளிட்ட பல்வேறு ஒன்றிய நிர்வாகிகள், கிராமப்புற கலைஞர்கள் கலந்து கொண்டு மத்திய அரசின் கலாச்சாரத் துறைக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.