தேசிய கொடிகள் விற்பனை

விழுப்புரம் நகரில் உள்ள கடைகளில் தேசிய கொடிகள் விற்பனை செய்யப்பட்டன.;

Update:2023-08-10 00:15 IST

இந்திய நாட்டின் 76-வது சுதந்திர தின விழாவையொட்டி அனைத்து பொதுமக்களும் தங்களது வீட்டில் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையொட்டி கடைகளில் தேசிய கொடிகள் விற்பனைக்காக தொங்க விடப்பட்டுள்ளன.

விழுப்புரம் நகரில் உள்ள கடைகளில் விற்பனைக்காக தொங்க விடப்பட்டுள்ள தேசிய கொடிகளை சிறுவர், சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வமுடன் வாங்கிச்சென்ற வண்ணம் உள்ளனர். இந்த தேசிய கொடிகள் ரூ.10 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்