திருச்செந்தூரில்மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்

திருச்செந்தூரில்மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

Update: 2023-01-25 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் பகத்சிங் பஸ்நிலையம் அருகில் இந்தி திணிப்பை எதிர்த்துப் போராடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளின் உருவப்படத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு, இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் மாவட்ட அமைப்பாளர் விடுதலைச்செழியன் தலைமை தாங்கினார். இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருளாளர் பாரிவள்ளல், கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர் தமிழ்க்குட்டி, ஒன்றிய செயலாளர்கள் சங்கத்தமிழன், தமிழ்வாணன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் மாவட்ட துணை அமைப்பாளர்கள் ராவணன், முன்னோடித்தமிழன், ஆறுமுக நயினார், ஒன்றிய அமைப்பாளர்கள் முத்துராமன், ராமகிருஷ்ணன், சிவநாதன், சாத்தான்குளம் ஒன்றிய துணை செயலாளர் சுரேந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்