சந்தனம், செம்மரங்கள் வெட்டி சாய்ப்பு
ஆலங்குடி அருகே சந்தனம், செம்மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது.;
ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை மேலபட்டியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 43), விவசாயி. இவர் தனது தோட்டத்தில் செம்மரம் மற்றும் சந்தன மரங்களை வளர்த்து வந்தார். இந்தநிலையில் கடந்த 17-ந் தேதி இவரது தோட்டத்தில் புகுந்த மர்ம ஆசாமிகள் ஒரு சந்தன மரத்தையும், 5 செம்மரங்களையும் வெட்டி சாய்த்தனர். இந்த சம்பவம் குறித்து சுந்தர்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மரங்களை வெட்டி சாய்த்த மர்ம ஆசாமிகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.