குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2023-08-27 23:59 IST

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட சங்கர் நகர் தெரு முனையில் பொதுமக்கள் குப்பைகளை போட குப்பைத்தொட்டி வைத்தனர். ஆனால், தற்போது அந்தக் குப்பைத்தொட்டி இல்லாததால் இப்போது குப்பையை தெரு முனையிலேயே போட்டு விட்டு செல்கின்றனர். அங்கு குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை அகற்றி, அந்த இடத்தை சுத்தம் செய்ய வேண்டும் என பதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்