சங்கரநாராயண சுவாமி கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழுந்தது

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழுந்தது.;

Update:2023-09-22 00:30 IST

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மார்ச், செப்டம்பர் மாதங்களில் 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையிலும் அதிகாலையில் சூரிய உதயத்தின்போது, மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நடைபெறுகிறது.

அதன்படி நேற்று அதிகாலையில் சூரிய உதயத்தின்போது கோவிலில் பக்தர்கள் செல்லும் வாசல் வழியாக மெல்ல மெல்ல நுழைந்த சூரியக்கதிரானது மூலவர் சிவலிங்க திருமேனி முழுவதும் பரவியது. சூரியபகவான் சிவலிங்கத்தை தரிசனம் செய்யும் அதிசய நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். தொடர்ந்து சுவாமிக்கும், சூரியபகவானுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.


Tags:    

மேலும் செய்திகள்