சங்கரநாராயண சுவாமி கோவிலில் மழைநீர் புகுந்தது

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் மழைநீர் புகுந்தது.;

Update:2022-11-06 00:15 IST

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி கோவிலில் சங்கரலிங்க சுவாமி சன்னதி, கோமதி அம்பாள் சன்னதி, சண்முகர் சன்னதி ஆகிய பகுதிகளில் மழை நீர் புகுந்தது. இதையடுத்து மின்மோட்டார் மற்றும் கோவில் ஊழியர்கள் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்