மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.;

Update:2023-09-23 00:02 IST

மண்மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் சார்பில் உலக அமைதி நாள் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியை வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு மரக்கன்றுகள் நட்டு வைத்து, தொடங்கி வைத்து, உலக அமைதியின் அவசியம் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

அதனைத்தொடர்ந்து நடந்த டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் பிளாஸ்டிக்கை தவிர்த்து மஞ்சள் பை பயன்பாடு குறித்த ஊர்வலத்தை பள்ளி தலைமை ஆசிரியர் சக்திவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் சாரண, சாரணிய இயக்க மாவட்ட செயலாளர் சாந்தி, பயிற்சி ஆணையர் முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்