உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கள்ளக்குறிச்சியில் மரக்கன்றுகள் நடும் விழா

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கள்ளக்குறிச்சியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

Update: 2023-06-05 18:45 GMT


கள்ளக்குறிச்சி நகராட்சி மயான வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு நகர மன்ற தலைவர் சுப்ராயலு தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் குமரன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் கலந்து கொண்டு மயான வளகத்தில் வேம்பு உள்பட பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து அரசு அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள் கலெக்டர் தலைமையில் உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

பின்னர் கள்ளக்குறிச்சி நகராட்சி சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சிறந்த தூய்மை பணிகளை மேற்கொண்ட பணியாளர்களுக்கு தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் பாராட்டு சான்றிதழை கலெக்டர் ஷ்ரவன் குமார் வழங்கினார். நகராட்சி பொறியாளர் முருகன், தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் உதவி பொறியாளர்கள் இளையராஜா, ராம்குமார், நகரமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்