புனித செபஸ்தியார் ஆலய சப்பரபவனி

புனித செபஸ்தியார் ஆலய சப்பரபவனி நடந்தது.

Update: 2023-05-24 18:45 GMT

தொண்டி, 

தொண்டி அருகே உள்ள வட்டானம் ஆர்.சி. நகரில் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. தினமும் நவநாள் திருப்பலி சிறப்பு மறையுரை நிகழ்த்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலியை தொண்டி பங்குத்தந்தை அருட்திரு சவரி முத்து நிறைவேற்றினார். தொடர்ந்து மறையுரை நிகழ்த்தினார். பின்னர் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புனித செபஸ்தியார் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து இறை மக்களுக்கு இறை ஆசி வழங்கினார். இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பு ஜெபம் செய்தனர். இதனையொட்டி ஜெபக்கூடம் திறக்கப்பட்டது. நேற்று காலை திருப்பலியும், கொடி இறக்கமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் ஒடவயல் ராஜாராம், வட்டானம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்