சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு; பிணை கோரி தலைமை காவலர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

கைது செய்யப்பட்டுள்ள தலைமைக் காவலர் முருகன், பிணை கோரி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.;

Update:2023-03-08 18:20 IST

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும், கடந்த 2020-ம் ஆண்டு சாத்தான்குளம் போலீசார் விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியதில் தந்தை-மகன் இருவரும் உயிரிழந்தனர்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட காவலர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தலைமைக் காவலர் முருகன், பிணை கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பிணை வழங்க மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Full View



Tags:    

மேலும் செய்திகள்