நெல்லை: 4 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய் - அதிர்ச்சி சம்பவம்
தமிழகத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.;
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நாய்க்கடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, தெருநாய்கள், வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் மானூர் பிள்ளையார் குளம் பகுதியில் இன்று மாலை 4 வயது சிறுமி ஐஸ்வர்யா விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு சுற்றித்திரிந்த தெருநாய் திடீரென சிறுமி ஐஸ்வர்யாவை கடித்து குதறியது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமியை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது