திருநெல்வேலி: முதியவர் கொலை வழக்கில் குற்றவாளி விரைந்து கைது

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் ஒரு முதியவர், அவரது வீட்டில் ரத்த காயத்துடன் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.;

Update:2025-12-02 21:41 IST

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் காவல் நிலைய சரகத்தில், நேற்று (1.12.2025) பெருமணல் கிராமத்தில், அந்தோணி இன்னாசி மகிமை தாசன் (வயது 77) என்ற முதியவர், அவரது வீட்டில் ரத்த காயத்துடன் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது சம்பந்தமாக, கூடங்குளம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்து, காவல்துறையினர் சம்பவ இடம் சென்று விசாரணை செய்தனர்.

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன், இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை விரைவில் கண்டுபிடிக்க உத்தரவிட்டார். அதன்பேரில், வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ் தலைமையில், உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு), கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் எழில் சுரேஷ் சிங் மற்றும் போலீசார் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், இறந்து போன முதியவருடைய நெருங்கிய உறவினரான, அதே ஊரைச் சேர்ந்த சிலுவை அந்தோணி என்பவரது மகன் பிரேம்குமார்(50) என்பவருக்கும், இறந்து போன நபருக்கும் இடையே, கடந்த (30.11.2025) ஞாயிற்றுக்கிழமை அன்று, இறந்து போன நபருடைய வீட்டில் வைத்து ஏற்பட்ட வாய் தகராறு காரணமாக, பிரேம்குமார் என்பவர் அந்தோணி இன்னாசி மகிமை தாசனை தாக்கி கொலை செய்த விவரம் கண்டுபிடிக்கப்பட்டது.

கொலையாளியின் விபரம் தெரியாத இந்த வழக்கில், காவல்துறையின் நுரித நடவடிக்கையால் குற்றவாளியின் விபரம் கண்டறியப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் திறம்பட செயல்பட்ட வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ், காவல் அதிகாரி மற்றும் காவல்துறையினரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார். 

Tags:    

மேலும் செய்திகள்