சாத்தான்குளம் அரசு கல்லூரியில்போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சாத்தான்குளம் அரசு கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.;
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நாட்டுநலப்பணித் திட்டம் மூலம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆங்கில இலக்கியம் மூன்றாமாண்டு மாணவி ஆ. ஹேமா பழனி வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ தலைமை தாங்கினார். முதலூர் முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் மா. சங்கிலிராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது, போதைப் பொருட்களின் வகைகள், அதனால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில், சுகாதார ஆய்வாளர் மதியழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர்கள் ந. உமாபாரதி, வளர்மதி ஆகியோர் செய்திருந்தனர். ஆங்கில இலக்கியம் மூன்றாமாண்டு மாணவி பொ. அபிநயா ராஜாத்தி நன்றி கூறினாார்.