வடலூரில் சத்திய தருமச்சாலை 156-ம் ஆண்டு தொடக்க விழா

வடலூரில் சத்திய தருமச்சாலை 156-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.;

Update:2022-05-25 22:13 IST

வடலூர், 

வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய தருமச்சாலையின் 156-ம் ஆண்டு தொடக்க விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி கடந்த 7 நாட்களாக அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம் மற்றும் அருட்பா முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு தருமச்சாலை மேடையில் திருவருட்பா இன்னிசை நாடகமும், வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும் நடந்தது. தொடக்க விழாவான நேற்று அதிகாலை 5 மணிக்கு் பாராயணமும், 7:30 மணிக்கு தருமச்சாலை வளாகத்தில் சன்மார்க்க கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 9 மணி முதல் 11 மணி வரை நடுவீரப்பட்டு புருஷோத்தமன் குழுவினரின் வில்லுப்பாட்டும், இன்னிசை நிகழ்ச்சியும், காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை ஜீவகாருண்ய ஒழுக்கம் சத்விசாரமும், பிற்பகல் 12 மணி முதல் தருமச்சாலை மேடையில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி செயல் அலுவலர் ராஜா சரவணக்குமார் முன்னிலையில் நடந்தது. நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் நந்தகோபால் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகளும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் , காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஞான சபை, தருமச்சாலை ஆகிய இடங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றன, நிகழ்ச்சி ஏற்பாடுகளை தெய்வநிலையம் செய்து இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்